காஸ் விலை உயர்வை கண்டித்து ஜனநாயக மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, ஜூன் 9: கிருஷ்ணகிரியில், அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், காஸ் சிலிண்டர் விலையை உடனடியாக குறைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகே, சமையல் காஸ் விலையை உடனடியாக குறைக்க வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் கவிதா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராதா கண்டித்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், காஸ் விலையை ஒன்றிய அரசு உடனே குறைக்க வேண்டும். அனைத்து குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு நிரந்தரமாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Related Stories: