வட்டி கொடு… இல்ல கிட்னி கொடு… பெண்ணுக்கு பாஜ நிர்வாகி மிரட்டல்

ஈரோடு: ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்த மணி மனைவி சுகுணா (37). நேற்று ஈரோடு எஸ்.பி.யிடம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:
என் குடும்ப தேவைக்காக ஈரோடு அசோகபுகரத்தை சேர்ந்த பாஜ நிர்வாகி கிருஷ்ணகுமாரிடம் ரூ.2 லட்சம் கடனாக பெற்றுள்ளேன். வாங்கிய கடன் தொகையை விட அதிக தொகையை செலுத்தி விட்டேன். இருப்பினும், மேலும் தொகையை வட்டி, அசலாக தர வேண்டும் என கிருஷ்ணகுமார் கேட்கிறார். பணம் கேட்டு என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு துன்புறுத்துகிறார்.

வட்டி கொடு அல்லது உனது கிட்னியை விற்று பணம் கட்டு. என்னிடம் வா. கிட்னி விற்கும் ஆட்களிடம் கூட்டி செல்கிறேன். கிட்னி விற்கும் மருத்துவமனை எனக்கு தெரியும். கிட்னி விற்கும் பணத்தை நான் எடுத்து கொள்கிறேன் என்று தகாத வார்த்தைகளால் கிருஷ்ணகுமார் பேசுகிறார். எனக்கு 2 மகள்கள் உள்ளனர். என் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அவரிடமிருந்து என்னை காப்பற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.

இதையடுத்து போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினர். பின்னர், பைனான்சியர் கிருஷ்ணகுமார் மீது கந்து வட்டி தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

Related Stories: