காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன 233வது மடாதிபதி பட்டாபிஷேகம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதின மடத்தின் 232வது மடாதிபதியான ஸ்ரீ ஞானபிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் (87), கடந்த டிசம்பர் 2ம் தேதி முக்தி அடைந்தார். இதையடுத்து 233வது மடாதிபதியாக கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு ஆன்மிக பணிகளை செய்து வந்த ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் நடராஜன் (76) ஆதீனத்தின் மடாதிபதியாக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து மடாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட பொறியாளர் நடராஜனுக்கு காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதினத்தின் 233வது குருமகா சந்நிதானம் திருச்சிற்றம்பல தேசிக ஞானப்பிரகாச பரமாச்சார்ய சுவாமிகள் என பெயர் சூட்டப்பட்டு, மடத்தின் பொறுப்புகள் கடந்த மாதம் 15ம் தேதி முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

இதைதொடர்ந்து, காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதினத்தின் 233வது குருமகா சந்நிதானம் திருச்சிற்றம்பல தேசிக ஞானப்பிரகாச பராமாச்சார்ய சுவாமிகளுக்கு தருமபுர ஆதீனம் 27வது பட்டம் குருமகா சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள், பட்டாபிஷேகம் செய்து வைத்தார். இதில், தூத்துக்குடி செங்கோல் மடஆதீனம் திருவாடுதுறை தம்பிரான் சுவாமிகள், திருப்பனந்தாள் தம்பிரான் சுவாமிகள், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் நிர்வாகிகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தொண்டை மண்டல ஆதீனத்தின் சீடர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர். விழா ஏற்பாடுகளை தொண்டை மண்டல ஆதீன ஆலோசனை குழுவினர் மற்றும் சீடர்கள் செய்தனர்.

Related Stories:

>