உண்மை தொண்டர்களை எதிரிகளாக பார்ப்பதா? சி.விஜயபாஸ்கர் கண்டனம்

புதுக்கோட்டை: கட்சிக்கு உழைக்கும் உண்மை தொண்டர்களை எதிரிகளாகப் பார்ப்பதா? என்று சி.விஜயபாஸ்கர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதிமுகமுன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இதுவரை எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்கவில்லை. இந்த நிலையில், அவர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், ”உழைக்கும் உண்மை தொண்டர்களை எதிரிகளாக பார்க்கும் தலைமையும், கேள்வி கேட்பதையே குற்றமாக பார்க்கும் அரசியலும், ‘வெற்றிக்கான பாதை அல்ல.’ வரலாறு நினைவில் வைத்திருப்பது எத்தனை பேரை நீக்கினோம் என்பதை அல்ல. எத்தனை பேரை ஒன்றிணைத்தோம், எத்தனை களங்களை வென்றெடுத்தோம் என்பதைத்தான்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: