தமாகாவில் இருந்து பொதுச்செயலாளர் யுவராஜா விலகல்

ஈரோடு: தமாகா பொதுச் செயலாளர் யுவராஜா அக்கட்சியில் இருந்து விலகினார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளராக எம்.யுவராஜா பொறுப்பு வகித்து வந்தார். இவர், இக்கட்சியில் 25 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்தார். கட்சியின் மாநில இளைஞரணி தலைவராகவும் பொறுப்பு வகித்தவர்.

இந்நிலையில், யுவராஜா கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகி கொள்வதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனுக்கு நேற்று கடிதம் அனுப்பி உள்ளார். கட்சியில் இருந்து விலகிய யுவராஜா, விரைவில் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகின்றது.

Related Stories: