சென்னை: “கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதற்கு எதிராக தங்களின் கோபத்தையும் அச்சத்தையும் போராட்டங்கள் மூலம் வெளிப்படுத்தக் கூட தவெக ஆட்சியில் மக்களுக்கு உரிமையில்லையா? தமிழ்நாட்டில் சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு, குற்றங்களுக்கு எதிராக போராடுபவர்களைக் கைது செய்வது அப்பட்டமான பாசிசப் போக்கு” என தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
