சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்டா மாவட்டங்கள் மற்றும் தெற்கு தமிழகத்தில் ஓரிகு இடங்களிலும், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும் நாளையும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை(ஜூன் 16) தேனி மாவட்டத்தில் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல ஜூன் 17, 18 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களுக்கு இராமநாதபுரம், மதுரை, மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை மதிய நேரங்களில் வெயிலின் தாக்கம் என்பது 100 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகக்கூடும் எனவும் மாலை நேரங்களில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என மீனவர்களுக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
