அமைச்சர்‌ என். ஆனந்த் தலைமையில்‌ நடைபெற்ற நீர்வளத்‌ துறையின் ‌ஆய்வுக்கூட்டம்‌: அதிகாரிகள் பங்கேற்பு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரின்‌ ஆணைக்கிணங்க, இன்று (15.06.2026) ஊரக வளர்ச்சித்துறை மற்றும்‌ நீர்வளத்துறை அமைச்சர்‌ என். ஆனந்த் தலைமையில்‌ நீர்வளத்‌ துறையின் ‌ஆய்வுக்கூட்டம்‌ நடைபெற்றது.

மேற்படி கூட்டத்தில்‌ ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ மேற்கொள்ளப்படும்‌ புதிய பாசனக்‌ கட்டமைப்புப்‌ பணிகள்‌, ஏற்கனவே உள்ள பாசனக்‌ கட்டமைப்புகளை சீரமைக்கும்‌ பணிகள்‌, நிலத்தடி நீர்‌ மேம்பாட்டுத்‌ திட்டப்பணிகள்‌, வெள்ளத்‌ தடுப்பு மற்றும்‌ தணிப்பு நடவடிக்கைகள்‌, அணை மேலாண்மை, கடல்‌ அரிப்புத்‌ தடுப்பு நடவடிக்கைகள்‌, நீர்நிலைகளைப்‌ புணரமைத்தல்‌, மேம்படுத்துதல்‌ மற்றும்‌ பாதுகாத்தல்‌ தொடர்பான பணிகள்‌, ஆண்டுதோறும்‌ நடைபெறும்‌ பராமறிப்புப்‌ பணிகள்‌, தூர்வாரும்‌ பணிகள்‌, பருவமழைக்கு முந்தைய பணிகள்‌ போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

மேலும்‌, சென்னையின்‌ வெள்ளத்‌ தணிப்புப்‌ பணிகள்‌, முந்தைய ஆண்டுகளில்‌ அறிவிக்கப்பட்ட பணிகள்‌, புதியதாக அறிவிக்கப்பட்ட பணிகள்‌, நிதி ஆதாரங்கள்‌ போன்றவையும்‌ ஆய்வு செய்யப்பட்டன.
அமைச்சர்‌ பணிகளை விரைவாகவும்‌, தரமாகவும்‌ மேற்கொண்டு பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்‌ என்று அறிவுறுத்திணார்கள்‌.

எதேனும்‌ புகார்கள்‌ வரப்பெற்றால்‌ உரிய விசாாணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்கள்‌ மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமேன துறையின்‌ முதன்மைச்‌ செயலாளருக்கு அமைச்சர்‌ அறிவுறுத்தினார்கள்‌.

இவ்வாய்வுக் கூட்டத்தில் நீர்வளத்துறையின் அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் சத்திய பிரத சாகு, நீர்வளத்துறையின் அரசு சிறப்புச் செயலாளர், சு. ஸ்ரீதரன், நீர்வளத்துறையின் முதன்மைத் தலைமைப் பொறியாளர் எஸ். கோபாலகிருஷ்ணன், நீர்வளத்துறையின் மண்டல தலைமைப் பொறியாளர்கள் மற்றும் செயல்பாட்டு தலைமைப் பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: