மாற்றம் அல்ல; ஏமாற்ற அலை வீசுகிறது; கோமாளிகளால் ஆளப்படுகிறோமா? விஜய் அரசு மீது அதிமுக தாக்கு

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் நேற்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
மக்களின் விருப்பம், எதிர்பார்ப்பைத் தெரிவிப்பதே ஜனநாயகத் தேர்தல் அமைப்பு. இத்தேர்தலில் வீசியது விஜய் அலையா, விபரீத அலையா என்பதே இப்போது மக்களின் அதிர்ச்சி நிலை. தேர்தல் வரலாற்றிலே பல்வேறு அலைகளை சந்தித்திருக்கிறோம். இப்போதிருக்கிற இந்த விபரீத அலை நமக்குப் புரியவில்லை. மாற்றம் என்று நம்பிக்கை வைத்தனர்; இன்றைக்கு ஏமாற்ற அலைதான் வீசுகிறது. இன்றைக்கு கோமாளிகளால் ஆளப்படுகிறோமோ என்கிற அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிட விஜய் அண்ணா கால அவகாசம் கேட்கிறார். இந்த ஒரு மாதத்தில், பதவியேற்பு விழாவிலே வாய் திறந்தார். பிறகு திருச்சி நன்றி விழாவில் வாய் திறந்தார். நாம் கேட்பது, விஸ்வரூபம் எடுத்திருக்கிற மேகதாது அணை, பெரியாறு அணை, வைகை ஆறு தூய்மை, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை, மதுரை, கோவை மெட்ரோ ரயில் பிரச்னைகள், மதுரை தூத்துக்குடி தொழிற்சாலை எக்கனாமிக் காரிடார், மதுரை விமான நிலைய விரிவாக்கம் என எதுவுமே வாய் திறக்க மறுக்கிறாரே விஜய் தம்பி? இவ்வாறு பேசியுள்ளார்.

Related Stories: