இளைஞர்கள், சிறுவர்கள் தவறான வழிகளில் செல்வதை தடுக்க வட்ட அளவில் போட்டிகளை நடத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்திருப்பது போதை கலாச்சாரம் தான். தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்கும் போதை கலாச்சாரம் தான் முக்கியக் காரணம். இளைய சமுதாயத்தை மீண்டும் சரியான பாதையில் வழி நடத்திச் செல்ல சிறந்த தீர்வு விளையாட்டு தான். இதை கருத்தில் கொண்டு அனைத்து கிராமங்களிலும், நகர்ப்பகுதிகளிலும் விளையாட்டு ஊக்குவிக்கப்பட வேண்டும்.

அனைத்து கிராமங்களிலும் தற்காலிகமாகவாவது விளையாட்டு திடல்கள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்; சிறுவர்களும், இளைஞர்களும் அதில் விளையாட விளையாட்டு கருவிகள் வாங்கித் தரப்பட வேண்டும். பள்ளிகளில் விளையாட்டு பாட வேளைகள் கட்டாயமாக்கப்பட வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக ஆண்டுக்கு ஒருமுறை வட்ட, மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். இதற்காக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி நிதி ஒதுக்கீடு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: