மீனவர்கள் வாழ்வாதாரம், சுற்றுச்சுழலை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச்செயலாளர் முஜீபுர் ரஹ்மான் வெளியிட்ட அறிக்கை:
பரங்கிப்பேட்டையில் இருந்து 18 கி.மீ.தொலைவில் கடலுக்குள் ரூ.425 கோடி செலவில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த இந்துஸ்தான் ஆயில் நிறுவனத்தினர் திட்டமிட்டுள்ளனர். வங்கக்கடலில் இந்த ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்பட்டால் மீன்வளம் மிகக்கடுமையாக பாதிக்கப்படும். மீனவர்களின் வாழ்வாதாரமும் மிகக்கடுமையாக பாதிக்கப்படும்.

பரங்கிப்பேட்டை கடற்பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த விஜய் தலைமையிலான தமிழக அரசு அனுமதிக்க கூடாது. கடலை நம்பி வாழும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது மாத்திரமல்ல, கடல் வாழ் உயிரினங்கள் அழிந்து போய்விடும். சுற்றுச் சூழலில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்புகள் ஏற்படும். இது போன்ற முயற்சிகளுக்கு கடந்த திமுக அரசு அனுமதிக்கவில்லை என்பதை கருத்தில் கொண்டு ஆளும் தமிழக அரசு தற்போதும் அனுமதி அளிக்கக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: