பாஜ தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இருந்து விலகுகிறோம்: ஜி.கே.வாசன் அறிவிப்பு

சென்னை: தமாகா செயற்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் நேற்று நடந்தது. ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். இதில் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், ராணி கிருஷ்ணன், துணை தலைவர்கள் விடியல் சேகர், டாக்டர் ராமன், முனவர் பாஷா, சக்திவேல் மற்றும் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர், துணை அமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ஜி.கே.வாசன் அளித்த பேட்டி:
கடந்த சில தேர்தல்களில் எங்களுடைய கூட்டணி எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. உள்ளாட்சி தேர்தலில் தனித்து செயல்பட நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்து உள்ளனர். தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு எடுக்கப்படும். என்டிஏ கூட்டணியில் இருந்து தமாகா வெளியேறியுள்ளது. கூட்டணி கட்சிகளுடன் சண்டைகள் கிடையாது. சச்சரவுகள் கிடையாது. தமிழகத்தில் கூட்டணி தர்மத்துக்கு எடுத்துக்காட்டாய் செயல்பட்ட கட்சி தமாகா.

பாஜ, அதிமுக வோடு நட்பு கட்சியாகவே செயல்பட்டு வருகிறோம். தொடர்ந்து 12 ஆண்டுகளாக கூட்டணியிலேயே இருந்ததால் எங்களின் வலு குறைந்ததாகவே கருதுகிறோம். காரணம், கூட்டணி கட்சிகள் அது சார்ந்த ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று தனித்தன்மையை நாங்கள் இழக்க விரும்பவில்லை. தேர்தல் நேரத்தில் கூட்டணி வைப்போம். அதுவரை எங்களின் கட்சியை வலுப்படுத்தும் முடிவை எடுக்க வேண்டும் என்று இந்த செயற்குழு எடுத்துள்ளது. தவெக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றிருப்பது சந்தர்ப்பவாத அரசியல். தவெக மற்றும் காங்கிரஸ் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: