4 ஆண்டுகள் கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி காலமானார்..!!

பாங்காக்: பல ஆண்டுகள் கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி பஜ்ரகிதியாபா மஹிடோல், தனது 47வது வயதில் காலமானார். தாய்லாந்தின் 73 வயதான மன்னருக்கும், அவரது முதல் மனைவி இளவரசி சோம்சாவலிக்கும் பிறந்த மூத்த மகள் பஜ்ரகிதியாபா மஹிடோல். இவர் மறைந்த மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ் மற்றும் தாய்லாந்தின் மறைந்த முன்னாள் ராணி சிரிகிட் ஆகியோரின் முதல் பேத்தி ஆவார். கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் நகோன் ரட்சசிமா மாகாணத்திற்கு பயணம் மேற்கொண்ட அவர், ராணுவம் நடத்தும் போட்டிகளுக்காக தனது நாய்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றார்.

அவர் பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரது வயிற்றில் தொற்று கண்டறியப்பட்டதன் விளைவாக, பெருங்குடலில் அழற்சி ஏற்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டவில்லை. கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் கோமாவில் இருந்த இளவரசி பஜ்ரகிதியாபா மஹிடோல், தனது 47வது வயதில் காலமானார் என்று அரசு அரண்மனை இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இளவரசி பஜ்ரகித்தியபா உடலிற்கு பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: