வாஷிங்டன்: அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகனில் உள்ள சில கட்டிடங்கள் நேற்று திடீரென மூடப்பட்டன. பென்டகன் வளாகத்தில் ஆபத்தான பொருட்கள் கசிந்தது மற்றும் காற்றின் தரம் குறைந்ததால் சில பகுதிகள் மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அங்கிருந்த பணியாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஈரானுடன் மீண்டும் அமெரிக்கா போர் தொடுத்துள்ள நிலையில் பென்டகன் மூடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
