உள்ளடி வேலையில் ஈடுபட்டவர்கள் பற்றி விசாரணை ஒரு மாதத்தில் விசாரணை அறிக்கை: காங்கிரஸ் உண்மை கண்டறியும் குழு பேட்டி

சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தோற்றதற்கான காரணம், உள்ளடி வேலைகளில் ஈடுபட்ட நிர்வாகிகள், தேர்தல் செலவுக்கு கொடுத்த பணத்தில் முறைகேடு உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக விசாரிக்க அகில இந்திய காங்கிரஸ் தலைமை உண்மை கண்டறியும் குழுவை அமைத்துள்ளது.  இந்த குழுவின் நடவடிக்கைகள் குறித்து குழு ஒருங்கிணைப்பாளர் இதாயதுல்லா சத்தியமூர்த்திபவனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விசாரணை நிறைவடைந்துள்ளது. ஒரு மாதத்திற்குள் குழு விசாரணை முடிவடையும். அதை தொடர்ந்து அறிக்கையை மேலிடத்தில் சமர்ப்பிப்போம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, குழுவின் உறுப்பினர்கள் சொர்ணா சேதுராமன், கமலிகா காமராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: