அப்போலோ மருத்துவமனை சார்பில் அட்வான்ஸ்டு கார்டியாக் லைப் சப்போர்ட் ஆம்புலன்ஸ் அறிமுகம்

சென்னை: அப்போலோ மருத்துவமனை மிகப்பெரிய ஸ்மார்ட் அட்வான்ஸ்டு கார்டியாக் லைப் சப்போர்ட் (ஏசிஎல்எஸ்) ஆம்புலன்ஸ் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தியுள்ளது. வானகரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நடைபெற்ற இதன் தொடக்க விழாவில், மதுரவாயல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரேவந்த் சரண் இந்த ஆம்புலன்ஸ் வாகன கூட்டமைப்பை தொடக்கி வைத்தார்.

நகரும் தீவிர சிகிச்சை பிரிவுகளாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன வாகனங்கள், பயணத்தின் போதே ஆம்புலன்ஸ் குழுவினரை மருத்துவமனை நிபுணர்களுடன் நேரடியாக இணைக்க நிகழ்நேர டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. சாலையில் செல்லும் போதே முக்கியமான மருத்துவ சிகிச்சைகளைத் தொடங்க வழிவகை செய்வதன் மூலம், சிகிச்சை தாமதங்களை குறைப்பதையும், சென்னை முழுவதும் உள்ள நோயாளிகளின் சிகிச்சை விளைவுகளை மேம்படுத்துவதையும் இந்த முன்முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக டாக்டர் இளங்குமரன் கூறியதாவது: வானகரம் அப்போலோ மருத்துவமனை சென்னையின் மிக முக்கியமான அவசர சிகிச்சை மையங்களில் ஒன்றாகும். இது நகரம், தொழில் துறை வழித்தடங்கள், மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கிறது. இதயம், நரம்பியல், விபத்து சிகிச்சை, குழந்தை மருத்துவம், இரைப்பை குடலியல், தீவிர சிகிச்சைப் பிரிவு, புற்றுநோயியல் மற்றும் தீக்காய மேலாண்மை ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரு 4ம் நிலை அதிநவீன சிகிச்சை மையமாக இது திகழ்வதால்,

அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் சார்ந்த அவசரக்கால சேவைகளை வழிநடத்த இது மிகவும் பொருத்தமான இடமாக அமைந்துள்ளது. அப்போலோவின் நெட்வொர்க் மற்றும் எங்களின் ஒருங்கிணைந்த அவசரக்கால சூழல் அமைப்பின் மூலம், நோயாளி மருத்துவமனையை வந்தடைவதற்கு முன்பே சிகிச்சையைத் தொடங்க முடியும். இது அவர்களுக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: