உரிய அனுமதியின்றி எம்.சாண்ட் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்

 

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், நீண்ட காலமாக இயக்கப்பட்டு வரும் கல் குவாரிகளின் உரிமத்தை தவிர கூடுதலாக 4 கல்குவாரிகளின் உரிமத்தை அரசு ரத்து செய்து தடை விதித்துள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு உரிய அனுமதியின்றி எம்.சாண்ட் கடத்தி வந்த 3 டிப்பர் லாரிகளை கனிமம் மற்றும் புவியியல் சுரங்க துறை மாவட்ட உதவி இயக்குனர் பிரசாத் உத்தரவின் பேரில் அதிகாரிகள் வெங்கடேசன் மற்றும் மஞ்சுநாதன் ஆகியோர் இரவு சோதனையின் போது விரட்டி பிடித்து பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 3 டிப்பர் லாரிகளும் தாராபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. 3 டிப்பர் லாரிகளை ஓட்டி வந்து தப்பிய டிரைவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: