10ம் வகுப்புகூட முடிக்காதவர்கள் அறிவுரை வழங்குவதா? அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுத்து ரீல்ஸ் வெளியிட்டு தவெகவினர் அடாவடி: ஆசிரியர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி

 

விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம், மாம்பழப்பட்டில் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று, தவெக காணை ஒன்றிய செயலாளரான ஜான்பீட்டர் உள்பட 10க்கும் மேற்பட்டோர் ஆய்வுக்கு செல்வதுபோல் சென்றுள்ளனர். அங்கு, தலைமை ஆசிரியர் அறைக்கு சென்று, ‘பள்ளி எவ்வாறு செயல்படுகிறது?, மாணவர்கள் எவ்வாறு படிக்கின்றனர்? என பல கேள்வி எழுப்பி விளக்கம் கேட்டுள்ளனர். இதனிடையே நடிகர் விஜயின் கட்சி துண்டுடன் தவெகவினர் நுழைந்ததை கண்ட, மாணவர்கள் விசில் அடித்து ஆரவாரத்தில் ஈடுபட, ஒரு வகுப்பறைக்குள் மாணவர்களுக்கு பாடம் எடுத்தும் சில அறிவுரைகளை தவெகவினர் கூறவே ஆசிரியர்கள், ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அரசு அதிகாரிகளே இதுபோன்று நடந்து கொள்ளாதபோது, 10ம் வகுப்பே சரவர முடிக்காத தவெக ஒன்றிய செயலாளர் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு அறிவுரை கூறி, ஆசிரியர்களிடம் கேள்வி கேட்டதோடு அதை தங்களது செல்போனில் வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகும் நிலையில், பொதுமக்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதை தவெக நிர்வாகிகள் தங்களது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ள நிலையில், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளியின் உதவி தலைமை ஆசிரியரிடம் தினகரனிடம் கேட்டபோது, மாணவர் சேர்க்கைக்காக வந்த தவெகவினரை பார்த்து மாணவர்கள் கூச்சலிட்டதால், அவர்கள் வகுப்பறைக்குள் சென்று மாணவர்களிடம் பேசியதாகவும், மரியாதை நிமித்தமாகவே அவர்கள் பள்ளிக்கு வந்து சென்றதாகவும் மழுப்பினார்.

Related Stories: