சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. தொண்டி 103, நுங்கம்பாக்கம், நாகையில் தலா 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. கடலூர், புதுச்சேரியில் தலா 102, காரைக்காலில் 101, மதுரை நகரம் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்தது. திருச்சி, திருத்தணியில் தலா 101, பரங்கிப்பேட்டை, தஞ்சையில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
