நன்றி குங்குமம் டாக்டர்
கோடை காலத்தில் சூரிய ஒளி மூலம் ஏற்படும் சேதத்தைக் குறைத்து சருமத்தை பாதுகாக்க கட்டாயம் செய்ய வேண்டிய விஷயங்கள்:
சன்ஸ்கிரீன் மூலம் பாதுகாத்தல்
கோடைகாலங்களில் சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பு என்பது முதன்மையானதாகும், குறிப்பாக வெளியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சூரியக் கதிரில் படும்படி இருக்க வேண்டியது இருந்தால், ஒவ்வொரு நாளும் தலை முதல் பாதம் வரை சன்ஸ்கிரீன் பூசிக்கொண்டீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், மேலும் அதிக பாதுகாப்பிற்காக SPF உடன் உட்செலுத்தப்பட்ட ஒப்பனையைப் பயன்படுத்துவது நல்லது.
சருமத்தை பாதுகாத்துக் கொள்வது…
வெயில் அதிகரித்து காணப்படும் நேரங்களில் சாதாரண ஆடைகளை அணிவது பயனில்லை. எனவே முடிந்த அளவுக்கு சருமத்தைப் பாதுகாக்கும் ஆடைகளை அணியுங்கள். சூரிய ஒளியில் இருந்து உங்கள் முகத்தைப் பாதுகாக்க கேப் அல்லது அகன்ற விளிம்பு கொண்ட தொப்பி மற்றும் சன்கிளாஸ்களை அணிந்துகொள்வது நல்லது.
நீர் சார்ந்த மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்துங்கள்
ஈரப்பதமான வானிலையிலும் கூட நீரேற்றத்துடன் இருக்க உங்கள் தோலுக்கு அத்தியாவசியமான முற்றிலும் வழக்கமாக பயன்படுத்தும் மாய்ஸ்சுரைசரை தவிர்க்கும் தவறைச் செய்யாதீர்கள். எனினும், உங்கள் வழக்கமான மாய்ஸ்சுரைசர் மிகுந்த எண்ணெய்த் தன்மையுடன் இருப்பதாக நினைத்தால், நீர் சார்ந்த மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்தத் தொடங்குங்கள்.
சருமத்தை நீரேற்றத்துடன் வைத்திருங்கள். கோடைகாலங்களில் அதிக வியர்வை வருவது இயல்பானது. இதனால், உடலில் நீரிழிப்பு அதிகமாக ஏற்படுவதால், அதிக அளவிலான தண்ணீர் குடிப்பது உங்களை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும். மேலும் பழச்சாறுகள் அருந்துவதும் நன்மை தரும். அதேசமயம், நாவறட்சியாக இருக்கிறது என்று கடைகளில் விற்கும் பானங்கள் அருந்துவதை தவிர்க்கவும். ஏனென்றால் அவற்றில் சர்க்கரை நிறைந்துள்ளன, அது உங்கள் தோல் அல்லது உடலுக்கு நல்லதல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கோடைகாலத்தில் தலைமுடியை பாதுகாக்க செய்ய வேண்டியவை
கோடைகாலம் நம் விலைமதிப்பற்ற தலைக் கவசம் போன்ற முடியிலும் ஒரு மோசமான விளைவை ஏற்படுத்தலாம். ஈரப்பதம் கொண்ட காற்று முடியை உலர்த்திவிடும், சிக்கு சிக்காக ஆக்கி விடும், எனவே தலை முடிக்கு ஹேர் சீரம், கண்டிஷனர் போன்றவற்றை உபயோகப்படுத்தி சிக்கு இல்லாமல் பாதுகாக்க வேண்டும். மேலும், தலையில் அடிக்கடி வேர்ப்பதால், தலைமுடி அழுக்காக பிசுபிசுப்பாக காணப்படும். எனவே, வாரத்திற்கு இருமுறை தலைக்கு குளிக்கலாம்.
சன் ஸ்மார்ட்டாக இருக்கவும்
UV கதிர்கள் நமது முடிக்கும் கெட்ட செய்திதான்! அதிகப்படியான சூரிய ஒளி முடியை உலர்த்தி விடலாம், உடையச் செய்யலாம் மற்றும் மங்கச் செய்யலாம். மூடி மறைத்தல்! நீங்கள் சூரிய ஒளியில் வெளியே செல்லும்போது உங்கள் தலையை மறைக்க ஒரு துண்டு அல்லது தொப்பியைப் பயன்படுத்தவும். இது கூடுதலான UV பாதுகாப்புக்காக மட்டும் அல்லாமல், உச்சந்தலையில் ஈரப்பதத்தை தக்கவைக்கவும் உதவுகிறது. ஒரு தொப்பி காற்றினால் ஏற்படும் சேதத்தைக் குறைக்கிறது, குறிப்பாக உங்கள் முடி இறுக்கமாக சிக்கிக்கொள்வதில் இருந்து, மேலும் நிறம் பூசப்பட்ட முடியைப் பாதுகாக்கிறது.
நீச்சலுக்கு முன் உங்கள் முடியைத் தயார்படுத்துங்கள்
நீச்சல் குளங்களில் பயன்படுத்தப்படும் உப்பு நீர் மற்றும் இரசாயனங்கள் உங்கள் முடியைச் சேதப்படுத்தலாம். கோடைகாலத்தின்போது உங்கள் முடியை மென்மையாக வைத்திருப்பது மற்றும் இந்தச் சூழ்நிலைகளில் வெளிப்படுத்தத் தயாராக வைத்திருப்பது அவசியமாகும். நீச்சலுக்கு முன்பாகவும் பிறகும் உங்கள் முடியை வெறுமனே தண்ணீரில் அலசுவது பாதுகாப்பானது. மேலும் உங்கள் முடியைப் பாதுகாக்க பின்னல் போட்டுக் கொள்ளுங்கள் அல்லது நீச்சல் தொப்பியைப் பயன்படுத்துங்கள், இது முடி சிக்காவதைத் தடுக்கும்.
கூடுதல் மினுமினுப்புக்காக சூடான எண்ணெயில் அலசவும்
தேங்காய், ஆலிவ் மற்றும் அவகோடா எண்ணெய்கள் முடியில் இறங்கி உச்சந்தலையை குளிர்ச்சியாக வைத்திருக்க ஏற்றது. எண்ணெய் முடியின் அடியில் இருந்து வேர்கள் வரை வேலை செய்கின்றன. எனவே இந்த எண்ணெய்களை தலைக்கு தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பின்னர், ஒரு மென்மையான ஷாம்பு கொண்டு நன்றாக அலசவும். இதனால் முடியில் பிசுபிசுப்பு நீங்கும்.
ஈரப்பதத்தைச் சேர்க்கவும்
கோடைகாலத்தில் லீவ்-இன் கண்டிஷனர் பயன்படுத்துவது நல்லது. உலர்ந்த சருமத்திற்கு லோஷனைப் போல இது முடிக்கு ஈரப்பதத்தைச் சேர்க்கிறது. இது ஈரப்பதமான வானிலையில் முடி சிக்காவதைக் குறைத்து சுருள் முடியைப் பாதுகாக்கவும் உதவும். இது தவிர, சிறந்த உணவு முறையும் கோடைகாலத்தை இன்னும் இனிமையானதாகவும் குளிர்ச்சியாகவும் வைக்க உதவும்.
