தாழம்பூவின் மருத்துவ குணங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

*தாழம்பூ மிகுந்த நறுமணம் பரப்புவதுடன் பெண்களின் மலட்டுத்தன்மை நீக்கும் மருந்தாகவும் விளங்குகிறது.

*தாழம்பூ செடியின் வேரை இடித்து சாறு பிழிந்து அதனுடன் வெல்லம் கலந்து உட்கொண்டு வர வெப்ப நோய்கள் தணியும்.

*தாழம்பூ வேர்க்கிழங்கை அரைத்து பசும்பால் கலந்து வடிகட்டாமல் குடித்தால் தாய்மை ஏற்படும்.

*தாழம்பூ இலையின் விழுதை இடித்து சாறு பிழிந்து நெய்யுடன் கலந்து காய்ச்சி 5 மில்லி அளவு உட்கொண்டு வர நீர் கடுப்பு நீர்சுருக்கு குணமாகும்.

*தாழம்பூவை துண்டு துண்டாக வெட்டி நீரில் இட்டு காய்ச்சி நன்கு கொதித்தபின், வடிகட்டி தேவையான இனிப்பு கூட்டி பாகுபதமாய் காய்ச்சி வடிகட்டினால் இதுவே தாழம்பூ மணப்பாகு ஆகும்.

*இதனை ஒரு தேக்கரண்டி எடுத்து நீரில் கலந்து இருவேளை குடித்து வர உடல் உஷ்ணத்தைத் தணிக்கும். தாழம்பூ மணப்பாகுவை வெயில் காலங்களில் தினசரி குடித்து வர அம்மை நோய் வராமல் தடுக்கலாம்.

*தாழம்பூ சாறு பலவித நோய்களை குணப்படுத்தும் சொரி, சிரங்கு போன்ற சரும நோய்களை குணப்படுத்தும்.

* தாழம்பூ சாம்பலை காயங்களில் மீது பூச புண்கள் ஆறும். தாழம்பூ வாதம் கபம் மேகம் சார்ந்த பிணிகளை அகற்றும் மேலும் வலிப்பு நோய்க்கும் சிறந்த மருந்தாகிறது.

*தாழம்பூவை காயவைத்து பொடி செய்து நீரில் ஊற வைத்து அருந்தினால் ரத்தம் சுத்தம் அடைகிறது.

*தாழம்பூ பொடியை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து நீரில் இட்டு கொதிக்க வைத்து அருந்தினால் நன்றாக பசி எடுக்கும். தாழம்பூ தைலம் நல்லெண்ணெயில் காய்ச்சி எடுக்கப்படுகிறது இது தலைவலிக்கு நல்லது.

*இயற்கை வழியில் தாழம்பூ செண்ட் எடுக்கலாம். இதன் மனம் மனிதர்களை மட்டுமல்ல கொடிய விஷம் கொண்ட பாம்புகளையும் தன் வசம் ஈர்க்கும் சக்தி கொண்டது.

*தாழம்பூவை ஊறவைத்த நீரைப் பருகுவதாலும், அதன் பொடியை உட்கொள்வதாலும் உடல் உஷ்ணம், நீர்க்கடுப்பு மற்றும் கோடைகால நோய்கள் குணமாகும்.

*உடலில் உள்ள அதிகப்படியான பித்தத்தைக் குறைத்து, அசுத்தமான ரத்தத்தைச் சுத்திகரிக்க உதவுகிறது.

*தாழம்பூவை சிறிதளவு நெருப்பில் காட்டி சாறு பிழிந்து காதில் விட்டால் காது வலி குணமாகும். மேலும், காதில் வரும் கட்டிகள் குணமாகும்.

தொகுப்பு:- ஆர். அனுராதாரவீந்திரன்

 

Related Stories: