விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தல்

சென்னை: சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்திற்கு பின்னர் அவர்களின் சார்பில் முதல்வரை சந்தித்தோம். தவெக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் அவர்களின் முதல் வாக்குறுதியாக அனைத்து சமுதாயங்களும் சமூக நீதி வாயிலாக பிரதிநிதித்துவம் இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் அதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என விஜய் கூறியிருந்தார்.

அதனை அவரிடத்தில் நினைவுபடுத்தினேன். முதல்வரும் அதனை ஏற்றுக்கொண்டார். எனவே, உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என தெரிவித்தேன். அதேபோல் இந்த கணக்கெடுப்பை கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என்றும், அது ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: