இந்தியா கூட்டணியில் தவெகவா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

சென்னை: சென்னை எழிலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: டெல்லியில் முதல்வர் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை என சிலர் விமர்சனம் செய்கின்றனர். அவரை பொறுத்தவரை பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்வதை காட்டிலும் செயல்பாடுகள் தான் முக்கியம். யூடியூபர் மாரிதாஸ் எந்த விதிகளில் கைது செய்யப்பட்டார் என தெரியவில்லை. பொதுவாக பத்திரிகை சுதந்திரம் வேண்டும். அது மக்கள் வளர்ச்சி பணியில் இருக்க வேண்டும்;

அதனை விடுத்து தனிப்பட்ட முறையில் இருக்கக்கூடாது. இந்தியா கூட்டணியில் இருந்து திமுக வெளியேறிவிட்டது. ஆனால் தவெகவின் கொள்கை முடிவு என்ன என்பதை முதல்வர் தான் முடிவெடுப்பார். தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக நீலகிரி, கோவை போன்ற மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். பட்டாக்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், ஆன்லைனில் விண்ணப்பித்தால் 5 நாளில் சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: