அரசுப் பள்ளி மாணவர்களின் உயிருடன் விளையாடும் தவெக அரசு: நயினார் நாகேந்திரன் கண்டனம்

சென்னை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் ெவளியிட்ட அறிக்கை:
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அயோத்திப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், காலைச் சிற்றுண்டியில் பல்லி விழுந்ததால், அதை உட்கொண்ட 11 பள்ளி மாணவர்கள் வாந்தி மற்றும் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இது அரசுப் பள்ளி மாணவர்களின் உயிருக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்புதான் அரியலூர் மாவட்டம் வெற்றியூர் அரசுப் பள்ளியிலும் இதேபோன்று மதிய உணவில் பல்லி விழுந்ததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். அந்தச் சம்பவத்தின் போதே மாணவர்களின் பாதுகாப்பு குறித்து எச்சரித்திருந்தேன், ஆனால் தவெக அரசு அதனை அலட்சியப்படுத்தியதன் காரணமாக தற்போது திருவண்ணாமலையிலும் அந்த தவறு தொடர்ந்திருக்கிறது. எனவே, பள்ளி மாணவர்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய தவெக அரசு உடனடியாக தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் உணவின் தரத்தை கண்காணிக்க தகுந்த ஆய்வுகளை மேற்கொள்வதோடு, தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: