தூத்துக்குடி, ஜூன் 8: தூத்துக்குடி விஇ ரோட்டைச் சேர்ந்தவர் சந்திராயப்பர். இவரது மகன் மரிய ஜென்சன்(26). இவர் தூத்துக்குடியில் விசைப்படகு வெங்டிங் பணியில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு இவர் ஹோலிகிராஸ் பள்ளி அருகே செல்போனில் பேசிக்கொண்டு நடந்து சென்றுள்ளார். அப்போது இரு பைக்குகளில் வந்த 4 வாலிபர்கள் அவரிடம் பேசுவதுபோல வந்து அவர் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டனர்.
இது குறித்து தகவலறிந்த மத்தியபாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிசிடிடி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த இந்த பகுதியில் நடந்த செல்போன் பறிப்பு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
