விஜய்யிடம் வெள்ளையை விட கருப்பு அதிகமாக உள்ளது: தவெக ஆட்சி தமிழ்நாட்டுக்கு பேராபத்து: டிடிவி தினகரன் பேட்டி

 

புதுக்கோட்டை: தவெக ஆட்சி தமிழ்நாட்டுக்கு பேராபத்து என்று டிடிவி தினகரன் பேட்டி அளித்துள்ளார். ஆளும்கட்சியை விட எதிர்க்கட்சி அதிக இடங்களில் வென்றுள்ளது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்ற அவகாசம் கேட்கலாம், சட்டம்-ஒழுங்கை சரி செய்ய அவகாசம் கேட்க கூடாது. மின்சாரம் தொடர்பான வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். 200 யூனிட் இலவச மின்சாரம், பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

சொன்னதை செய்வோம் என்று சொன்ன முதல்வர் விஜய் சொன்னது என்னாச்சு. முதலமைச்சர் விஜய் தான் கொடுத்த வாக்குறுதிப்படி பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். பயிர்க்கடன் தள்ளுபடியில் பித்தலாட்டம் செய்துள்ளார் முதலமைச்சர் விஜய். ஏமாற்றும் போது சுட்டிக் காட்ட வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை. சிலர் தூண்டிவிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்துவதாக பேசிய அமைச்சர் நிர்மல்குமாருக்கு டிடிவி கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணிக் கட்சிகளிடம் கெஞ்சி ஆதரவு பெற்றுள்ளார் விஜய். ஆசை காட்டி அமமுக எம்.எல்.ஏ. காமராஜிடம் ஆதரவு கடிதம் பெற்றது தவெக. அமமுக எம்.எல்.ஏ. காமராஜை களவாடிவிட்டது தவெக. ஒரு எம்.எல்.ஏவை தங்களிடம் இருந்து திருடியுள்ளது தவெக. தூய சக்தி என கூறிய தவெக அசிங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பிள்ளை பிடிப்பது போல் எம்எல்ஏக்களை தவெக இழுத்துச் சென்றதாக டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். இதுவரை இல்லாத அளவுக்கு எம்.எல்.ஏ.க்களை பதவி விலக வைத்துள்ளது தவெக. 4 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது சட்டத்துக்கு புறம்பானது.

விஜய்யிடம் வெள்ளையை விட கருப்பு அதிகமாக உள்ளது. எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அதிமுக பல ஆண்டுகளாக உள்ள கட்சி; தவெக ஒரு நீர்க்குமிழி. மாற்றம் வேண்டும் என வரலாற்றுப் பிழை செய்ததை மக்கள் உணரும் காலம் வரும். ஜாதியை ஒழித்ததாக கூறும் தவெக மயிலாப்பூர், ஸ்ரீரங்கத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரை நிறுத்தியது ஏன். மூடப்பட்ட கல்குவாரிகளையே மீண்டும் மூட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தவெக அரசு தவறான பாதையில் செல்கிறது என்பதை மக்கள் விரைவில் அறிவர். ஆட்சியில் இருந்துக் கொண்டு ரீல்ஸ் படம் ஓட்டமுடியாது. தவெக தூய சக்தி அல்ல, பித்தலாட்ட சக்தி என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Related Stories: