பிஎஸ்எப் வீரர்களின் வீரத்தை பாராட்டும் விதமாக இந்தியா-பாக்.எல்லையில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி

புதுடெல்லி: எல்லையை பாதுகாப்பதற்காக உயிரை பணயம் வைத்து பணிபுரியும் பாதுகாப்பு படையினரின் வீரத்தை பாராட்டி பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தலைமையில் இசை நிகழ்ச்சி இன்று நடக்கிறது. ஜெய் ஹோ- வீரர்களுக்கு ஒரு அஞ்சலி என்ற தலைப்பிலான சிறப்பு நிகழ்ச்சி இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள அட்டாரியில் நடத்தப்படுகிறது.

தாய்நாட்டைப் பாதுகாப்பதற்காகத் தங்களின் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) வீரர்களின் வீரத்தைப் பாராட்டி, வீரர்,வீராங்கனைகளுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. அட்டாரியில் உள்ள ஜேசிபி மைதானத்தில் இன்று மாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை நடைபெறும் அணிவகுப்பு விழாவின் போது இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இசை நிகழ்ச்சியில் நடிகர் வேதாங் ரெய்னாவும் கலந்துகொள்கிறார்.

Related Stories: