வானூர், ஜூன் 6: சர்வதேச நகரமான ஆரோவில்லில் தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தலைமையில் நிர்வாகக் குழு ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுகாவில் அமைந்துள்ள ஆரோவில் சர்வதேச நகரத்தில் நிர்வாகக் குழு ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தலைமையில் நேற்று நடந்தது. முன்னதாக ஆரோவில் வருகை தந்த ஆளுநரை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அப்துல் ரஹ்மான், ஆரோவில் பவுண்டேஷன் செயலாளர் ஜெயேந்தி ரவி, விழுப்புரம் எஸ்பி சாய் பிரணீத் ஆகியோர் வரவேற்றனர்.
இதையடுத்து ஆரோவில் நிர்வாகம் தொடர்பான முக்கிய ஆலோசனையில் ஆளுநர் மற்றும் நிர்வாக குழுவினர் ஈடுபட்டனர். முன்னதாக இந்நிகழ்வில் பங்கேற்க வந்த தமிழக ஆளுநரை, புதுச்சேரி பாஜ அமைச்சர் நமச்சிவாயம், பாஜ தலைவர் ராமலிங்கம் ஆகியோர் நேரில் சந்தித்து பூங்கொடுத்து கொடுத்து வரவேற்றார். இதையொட்டி கோட்டகுப்பம் டிஎஸ்பி ரூபன்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஆரோவில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
