உறைபனி தாக்கம் மீண்டும் அதிகரிப்பு

ஊட்டி,மார்ச்6:நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் பனி கொட்டியதால் அதிகாலை நேரங்களில் குளிர் வாட்டியது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் துவங்கி பிப்ரவரி மாதம் இறுதி வரை கடும் பனிப்பொழிவு காணப்படும். ஆனால் இம்முறை நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் வரை மழை பெய்ததால் பனியின் தாக்கம் மிகவும் குறைந்து காணப்பட்டது. ஜனவரி 15ம் தேதிக்கு மேல் பனியின் தாக்கம் சற்று அதிகமாக காணப்பட்டது. கடந்த மாதம் ஓரிரு நாட்கள் பனியின் தாக்கம் அதிகரித்து o டிகிரி செல்சியஸிற்கு வெப்பநிலை சென்றது. பெரும்பாலான நாட்கள் 5 டிகிரி செல்சியஸிற்கு குறைவாகவே வெப்பநிலை பதிவாகியது. இதனால் மாவட்டத்தில் குளிர் அதிகமாக காணப்பட்டது.

குறிப்பாக ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பனியின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்பட்டது. கடந்த 10 நாட்களாக பனியின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. அதேசமயம் காற்று வீசியதால் பகல் நேரங்களில் வெயில் அடித்த போதிலும் குளிர் உணரப்பட்டது. கடந்த வாரத்தை விட பனியின் தாக்கம் குறைந்தது என நினைத்திருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென மீண்டும் பணி கொட்டியது. பெரும்பாலான இடங்களில் புது மைதானங்கள் வெள்ளை கம்பளம் விரித்தார் போல் காட்சி அளித்தன. தாவரவியல் பூங்கா,பந்தய மைதானம்,தலைகுந்தா போன்ற பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது. இதனால் நேற்று அதிகாலை குளிர் அதிகமாக காணப்பட்டது. இதனால் அதிகாலை நேரங்களில் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் மழை காய்கறி தோட்டங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். நேற்று ஊட்டியில் அதிகபட்சமாக 21 டிகிரி செல்சியசும், குறைந்த பட்சமாக 8 டிகிரி செல்சியசும் பதிவாகியிருந்தது.

Related Stories: