மம்தா கட்சியில் குழப்பம் மேற்குவங்கத்தில் மேலும் ஒரு திரிணாமுல் மேயர் ராஜினாமா

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிருஷ்ணா சக்ரவர்த்தி மேயர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். மேற்குவங்கத்தில் அண்மையில் நடந்து முடிந்த பேரவை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதுடன், மம்தாவுக்கு எதிராகவும் கட்சியினர் போர்க்கொடி ஏந்தி உள்ளனர்.

58 அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆதரவு பெற்ற ரிதப்ரதா பானர்ஜி சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராகி உள்ளார். கொல்கத்தா மேயர் பர்ஹத் ஹக்கீம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரை தொடர்ந்து பிதான்நகர மாநகராட்சி மேயர் பதவியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிருஷ்ணா சக்ரவர்த்தி ராஜினாமா செய்துள்ளார். அவர் ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கினார்.

Related Stories: