நீதித்துறையில் ஏ.ஐ பயன்பாடு உச்ச நீதிமன்றம் புதிய வரைவு விதிகள் வெளியீடு: தவறு நடந்தால் நடவடிக்கை எனவும் எச்சரிக்கை

புதுடெல்லி: நாடு முழுவது தற்போது ஏ.ஐ தொழில்நுட்பம் என்பது மிகவும் அத்தியாவசிய ஒன்றாக உருவெடுத்துள்ளது. தற்போது நீதித்துறையிலும் ஏ.ஐ தொழிநுட்பம் என்பது பயன்படுத்தப்பட்டு வரப்படுகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தொடர்பான புதிய வரைவு நெறிமுறையை உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.நரசிம்மா தலைமையிலான அமர்வு நேற்று வெளியிட்டுள்ளது.

அதில், ‘‘ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் வழக்கறிஞர்கள் மனுக்கள் மற்றும் வாதங்களை தயாரிக்கலாம். ஆனால், ஏ.ஐ மூலம் தயாரிக்கப்படும் அனைத்தையும் முன்னதாக அதனை நீதிமன்றத்துக்கு கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். குறிப்பாக ஏ.ஐ மூலம் சட்டம் தொடர்பான ஆராய்ச்சி, வரைவு செய்தல், மொழிபெயர்ப்பு, வழக்கு மேலாண்மை உள்ளிட்டவை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது. இருப்பினும் மேற்கண்ட விவகாரத்தில் சட்டம் தொடர்பான இறுதி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் நீதிபதிகளுக்கு மட்டுமே உள்ளது.

அதில் எந்தவித சமரசமும் தற்போதைய நிலையில் இல்லை. மேலும் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தவறு நடக்கும் பட்சத்தில் அதற்கு வழக்கறிஞர்கள் மட்டுமே பொறுப்பு ஆவார்கள். அதேப்போன்று ஏ.ஐ பயன்படுத்த தடை செய்யப்பட்ட பட்டியலும் இந்த உத்தரவின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அதுகுறித்த அட்டவணையும் கீழமை நீதிமன்றங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த புதிய வரைவு விதிகள் விவகாரம் தொடர்பாக ஜூன் 20 வரை பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று உத்தரவிட்டனர்.

Related Stories: