நீட் மறுதேர்வு வினாக்களும் கசிவா? வைரலாகும் தகவலால் அதிர்ச்சி

புதுடெல்லி: நீட் மறு தேர்வு வினாக்களும் கசிந்ததாக வெளியான தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 5 ஆயிரம் தேர்வு மையங்களில் 22 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வின் வினாத்தாள்கள் கசிந்ததாக எழுந்த புகாரில், தேர்வு ரத்து செய்யப்பட்டு ஜூன் 21ம் தேதி மறுதேர்வு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் மறுதேர்வு வினாக்களும் கசிந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, என்டிஏ மற்றும் சைபர் டோஸ்ட் ஆகிய 2 எக்ஸ்தள பக்கங்களையும் டேக் செய்து, பிரின்ஸ் ஸ்ரீவஸ்தவா என்பவர் பதிவிட்டிருந்தார். அதில், ‘எனக்கு ஒரே நபர் பயன்படுத்தும் சில டெலிகிராம் பக்கங்களின் லிங்குகள் கிடைத்தன. அதில், நீட்-2026 மறுதேர்வுக்கான வினாக்கள் வெளியிடப்படுவதாக அறிவிப்புகள் வந்துள்ளன.

தயவு கூர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கேட்டு கொண்டிருந்தார். அதே நேரத்தில் மறுதேர்வு வினாக்கள் கசியவில்லை என்றும் சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் அனைத்தும் முற்றிலும் போலியானவை என்று தேசிய தேர்வு முகமை மற்றும் சைபர் கிரைம் வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.

Related Stories: