சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.1,15,840க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.1,15,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவி வரும் அரசியல் மாற்றங்கள், எப்போதும் தங்கம் விலையில் எதிரொலிப்பது வழக்கம். அந்த வகையில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்படப் போவதாக வெளியாகியுள்ள தகவல்கள், உலகப் பொருளாதாரத்தை புதிய பாதையில் தள்ளியுள்ளது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

அதாவது கடந்த 29ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து கிராம் ரூ.14,630க்கும், பவுனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 17,040க்கும் விற்பனையானது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.290க்கும், பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமை தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறையாகும். ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு திங்கட்கிழமை தங்கம் மார்க்கெட் தொடங்கியது. வாரத்தின் தொடக்க நாளான திங்கட்கிழமை அன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்தது.

கிராமுக்கு ரூ.130 குறைந்து ஒரு கிராம் ரூ.14,500க்கும், பவுனுக்கு ரூ.1,040 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 16,000க்கும் விற்றது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.290க்கும், பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் விற்பனையானது. வாரத்தின் தொடக்க நாளில் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.

இதனையடுத்து மூன்று நாள் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. இந்த நிலையில், மூன்று நாள் பிறகு இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.1,15,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.14,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.285க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: