திருக்காட்டுப்பள்ளி, ஜுன் 4: திருக்காட்டுப்பள்ளி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை முதல் நடைபெற உள்ளது. திருக்காட்டுப்பள்ளி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்களுடன் செயல்பட்டு வருகின்றது. தமிழக அரசின் அறிவிப்பிற்கு ஏற்ப 2026-2027ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை வரும் 5.6.2026 முதல் நடைபெற உள்ளது.
ஜூன் 5ம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவுக்கும், ஜூன் 9ம் தேதி பி.ஏ தமிழ் பாடப் பிரிவிற்கும் ஜூன்10ம் தேதி பி.ஏ ஆங்கிலப் பாடப்பிரிவுக்கும், ஜூன் 11ம் தேதி பிஎஸ்.சி.கணினி அறிவியல் பாடப்பிரிவிற்கும், ஜூன்12ம் தேதி பி.காம் வணிகவியல், ஜூன் 13ம் தேதி பி.பி.ஏ வணிக நிர்வாகவியல் பாடப்பிரிவிற்கும் கலந்தாய்வு நடைபெறும். 15.6.2026 முதல் 18.6.2026 வரை காலியாக உள்ள அனைத்துத் துறைப் பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு தொடர்ந்து நடைபெறும்.
விண்ணப்பதாரர்கள் இணையவழி செய்த விண்ணப்பநகல், 10, 11, 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ், வகுப்புச் சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் மூன்று நகல்கள், கடவுச்சீட்டு அளவு புகைப்படம், ஆதார் அட்டை நகல், வங்கி சேமிப்பு புத்தக நகல் ஆகியவற்றுடன் உரிய நாட்களில் காலை 9.30 மணிக்கு வருகைதர வேண்டும். ஊரகப்பகுதி மாணவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி உயர்கல்வியில் சேர கல்லூரி முதல்வர் பாலு அழைப்பு விடுத்துள்ளார்.
