கும்பகோணம், ஜுன் 4: தமிழ்நாடு மின்சார வாரிய கும்பகோணம் வடக்கு உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; முள்ளுக்குடி மற்றும் குறிச்சி துணைமின் நிலையத்தில் நாளை 5ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் இந்த துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகம் பெறும் குறிச்சி, கீழக்காட்டூர், காகிதபட்டறை, பந்தநல்லூர், கோணுலாம்பள்ளம், முள்ளங்குடி, செருகுடி, புழுதிகுடி, நெய்வாசல், ஆரலூர், பட்டவெளி, கீழமனக்குடி, கயலூர், குணதலைப்பாடி, கதிராமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது.
அதேபோல், திருப்பனந்தாள் துணைமின் நிலையத்திலிருந்து வருகிற 6ம் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணைமின் நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகம் பெறும் திருப்பனந்தாள், சோழபுரம், பாலாக்குடி, அணைக்கரை, தத்துவாஞ்சேரி, சிக்கல்நாயகன்பேட்டை, மானம்பாடி, மகாராஜபுரம், கோவிலாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வரும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
