துணை ராணுவ அணிவகுப்பு

பொன்னேரி, மார்ச் 6: பொன்னேரி சட்டமன்ற (தனி) தொகுதியில் மக்களிடம் அச்சத்தைப்போக்கும் வகையில் துணை ராணுவப்படையினர் இணைந்து அணிவகுப்பு நடத்தினர். மேலும், முக்கிய வீதிகள் வழியாக வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், அச்சமின்றி வாக்குச்சாவடிகளுக்கு வந்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த அணிவகுப்பில் துணை ராணுவப்படை வீரர்கள் கைகளில் துப்பாக்கி ஏந்தியபடி மிடுக்குடன் நடந்து சென்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதேபோல் மீஞ்சூர், காட்டூர், திருப்பாலைவனம், சோழவரம் ஆகிய பகுதிகளிலும் துணை ராணுவப்படையினர் அணிவகுப்பு நடத்தினர். இதில் பொன்னேரி டிஎஸ்பி கல்பனா தத், பொன்னேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மார்ட்டின், மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன், திருப்பாலைவனம் இன்ஸ்பெக்டர் மகிதா மேரி கிருஷ்டி, எஸ்ஐக்கள் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.

Related Stories:

>