உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு கூட்டம்

திருவையாறு, ஜூன் 4: திருவையாறு அடுத்த கடுவெளி ஸ்ரீவெங்கடேஸ்வரா இல்லத்தில் ஊராட்சி ஒன்றியம் சார்பில் உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றியவட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன் தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தனலெட்சுமி வரவேற்று பேசினார். கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயசக்தி, உதவியாளர் சுரேஷ்குமார், ஊராட்சி செயலாளர்கள், சுகாதார ஊக்குனர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குனர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது கூட்டத்தில் கிராமம் தோறும் தூய்மை பணி, பதுகாக்கப்பட்ட குடிநீர், சுதாதாரமான காற்று வசதி, ஆகியவை அனைவருக்கும் கிடைக்கும்படி வழிவகை செய்து கொடுக்க வேண்டும் அனைவரும் நலமுடன் சுகாதார வாழ்க்கை வாழ ஊக்கபடுத்த வேண்டும் என்று எடுத்து கூறப்பட்டது முடிவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் ஸ்டாலின் நன்றி கூறினார்.

 

Related Stories: