தூத்துக்குடியில் 17 வயது மாணவி கடத்தல்: காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என எஸ்.பி. அலுவலகத்தில் பெற்றோர் புகார்

 

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் 17 வயது மாணவியை 3 பேர் கும்பல் காரில் கடத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த | மணி முருகன் என்ற டப்பா மணி உள்பட 3 பேர் +5 காரில் வந்து சிறுமியை கடத்தியுள்ளனர். கடந்த ஜூன் 1ம் தேதி வீட்டில் இருந்த மாணவியை மணி முருகன் (33) காரில் வந்து கடத்தியுள்ளார். மாணவியை காணவில்லை என தந்தை அளித்த புகாரில் ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 நாட்கள் ஆகியும் இதுவரை யாரையும் கைது செய்யாததால் எஸ்.பி. அலுவலகத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், கிராம மக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். மாணவியை கடத்தி 3 நாட்கள் ஆகியும் சம்பந்தப்பட்டவர்களை காவல்துறை கைது செய்யவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories: