மாணவிக்கு பாலியல் தொல்லை – காவலர் அதிரடி கைது

தென்காசி: சங்கரன்கோவில் அருகே சிவகிரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தாக எழுந்த புகாரில் காவலர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆவடி சிறப்பு படைப்பிரிவில் காவலராக பணியாற்றிய விஜயகுமாரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் சிவகிரியில் கோவில் திருவிழாவில் காவலர் விஜயகுமார் அப்பகுதி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்தாக புளியங்குடியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருகிறது. அதன் அடிப்படியில் விசாரணை மேற்கொண்ட அனைத்து மகளிர் காவல் துறையினர் காவலர் விஜயகுமார் என்பவரை கைது செய்தனர்.

புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலர் விஜயகுமார் மீது போக்ஸோ வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் காவலர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: