நடிகர் ரஜினி திடீர் ஊட்டி விசிட்

 

ஊட்டி: நடிகர் ரஜினி கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து நேற்று மாலை கார் மூலம் ஊட்டிக்கு வந்தார். அங்குள்ள இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமான பிரபல ஓட்டலுக்கு சென்ற அவரை, ஓட்டல் நிர்வாகத்தினர் வரவேற்றனர். இதனிடையே ரஜினி ஊட்டிக்கு வந்திருந்ததையறிந்த அவரது ரசிகர்கள் இரவு ஓட்டலுக்கு சென்றனர். இதுபற்றி ரஜினிகாந்திடம் தெரிவிக்கப்பட்டது.

அறையில் இருந்து வெளியே வந்த அவர், ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசினார். பின்னர் அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டு, மீண்டும் தனது அறைக்கு சென்று wஓய்வெடுத்தார். இன்று மதிய உணவை முடித்து கொண்டு நடிகர் ரஜினி சென்னை திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related Stories: