ரஜினி, அஜித்துடன் அண்ணாமலை பிறந்தநாள் போஸ்டர்களால் பரபரப்பு

 

மதுரை: தமிழ்நாடு பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகுவதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கடிதம் கொடுத்துள்ளார். இதனிடையே அவர், புதிய கட்சி தொடங்கலாம் எனவும், அதற்கான அறிவிப்பை ஓரிரு நாட்களில் வெளியிடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மதுரை முழுவதும் அண்ணாமலை ஆதரவாளர்கள், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

அதில், வலதுபுறத்தில் நடிகர் அஜித், இடது புறத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரின் கைகளை அண்ணாமலை பிடித்துக் கொண்டு 3 பேரும் ஒன்றாக நடந்து செல்வதை போல அச்சிடப்பட்டுள்ளது. மேலும், பிரதர்ஸ் ஆப் அண்ணாமலை, மனித கடவுள் அஜித் பக்தர்கள் என்ற வாக்கியங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Related Stories: