திருத்துறைப்பூண்டி, ஜூன் 3: திருத்துறைப்பூண்டியில் தவ்ஹீத் ஜமாஅத் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் ஹாஜா மைதீன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் முகமது சித்திக், மாவட்ட துணை செயலாளர் யாசர் அரபாத் ஆகியோர் உரையாற்றினர்.
திருத்துறைப்பூண்டி நகர கிளை தலைவர் ஜமால், செயலாளர் முகமது யாசர், பொருளாளர் ஹாலித், துனைத்தலைவர் அன்சாரி, துணை செயலாளர்கள் ஜெய்னுல் பர்மானுல்லா, ஹாஜா மைதீன், கட்டிமேடு கிளை தலைவர் முகமது இஸ்ஹாக், கிளை செயலாளர் மன்சூர், நெடும்பலம் கிளை செயலாளர் தாஜ், கடியசேரி கிளை தலைவர் முஸ்தபா, துனைச்செயலாளர் நைனா முகமது உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழகத்தில் நிலவி வரும் பாலியல் குற்றங்களுக்கு எதிராகவும் போதை பழக்க வழக்கங்களுக்கு எதிராகவும் வரும் 13ம்தேதி திருத்துறைப்பூண்டி நகரில் விழிப்புணர்வு பேரணி நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. முடிவில் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் அப்துல் ரஹ்மான் நன்றி கூறினார்.
