நன்னிலம் பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகள்

திருவாரூர், ஜூன் 3: திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் மோகனசந்திரன் ஆய்வு செய்தார். பணிகளை விரைவாகவும், உரிய தரத்துடனும் முடிப்பதற்கு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் அரசின் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் மோகனசந்திரன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்படி, திருவாஞ்சியம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.8 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் 10 ஆயிரம் மரக்கன்றுகளுக்காக உற்பத்தி செய்யப்பட்டுள்ள நாற்றாங்காலினை பார்வையிட்டார். மேலும் நன்னிலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் ரூ.2 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் சிறுவிளையாட்டு மைதான கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், முடிகொண்டான் ஊராட்சியிலுள்ள நீர் உந்து நிலையத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்தும் ஆய்வு செய்த நிலையில் பணிகளை விரைவாகவும், உரிய தரத்துடனும் முடிப்பதற்கு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் இளங்கோவன் (திருவாரூர்), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வி, பிரபு, குடிநீர் வடிகால் வாரிய உதவிபொறியாளர் வெற்றிவேல், ஒன்றியபொறியாளர் ரமேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Related Stories: