சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று 28 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சாய்குமார் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தலைமைச் செயலாளர் சாய்குமார் வெளியிட்ட அரசாணை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலாளர் சஜன்சிங் சவான், மக்கள் பவன் கவர்னரின் செயலாளராகவும், சென்னை மாவட்ட முன்னாள் கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உயர்கல்வித் துறை சிறப்புச் செயலாளராகவும், அறிவியல் நகர துணைத் தலைவர் ஹர்சகாய் மீனா நில சீர்திருத்த ஆணையராகவும், தமிழ்நாடு சிமென்ட் கழக மேலாண்மை இயக்குனராக இருந்த அஜய் யாதவ், பால் உற்பத்தி மற்றும் பால்வள ஆணையர் மற்றும் ஆவின் மேலாண்மை இயக்குனராகவும், தமிழ்நாடு பண்டகசாலை கழக மேலாண்மை இயக்குனராக இருந்த விஜயராணி, தோட்டக்கலை மற்றும் பயிர்கள் இயக்குநராகவும், தோட்டக்கலை மற்றும் பயிர்கள் இயக்குனராக இருந்த குமாரவேல் பாண்டியன், மாநில திட்டக் கமிஷன் உறுப்பினர் செயலாளராகவும், அரியலூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரத்தினசாமி, தொழில்நுட்பக் கல்வி இயக்குனராகவும், நெல்லை முன்னாள் கலெக்டர் சுகுமார் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை இயக்குனராகவும், பால் உற்பத்தி மற்றும் பால்வள இயக்குனர், ஆவின் மேலாண்மை இயக்குனர் ஜான் லூயிஸ், தமிழ்நாடு பண்டகசாலை கழக மேலாண்மை இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று சர்க்கரை முன்னாள் இயக்குனர், தமிழ்நாடு சர்க்கரை கழக மேலாண்மை இயக்குனர் அன்பழகன், தமிழ்நாடு கடல்சார் வாரிய துணை தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாகவும், ராணிப்பேட்டை முன்னாள் ஆட்சியர் சந்திரகலா, தமிழ்நாடு சிமென்ட் கழக மேலாண்மை இயக்குனராகவும், தொழில்நுட்ப கல்வி இயக்குனர் விசாகன் அறிவியல் நகர துணைத் தலைவராகவும், சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (பணிகள்) சிவகிருஷ்ணமூர்த்தி தமிழ்நாடு குடிநீர் சப்ளை மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரிய இணை மேலாண்மை இயக்குனராகவும், நகராட்சி நிர்வாக இணை ஆணையர் அனாமிகா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண்மை இயக்குனராகவும் தேனி முன்னாள் ஆட்சியர் ரஞ்சித் சிங், தென்காசி மாவட்ட ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நாமக்கல் மாவட்ட முன்னாள் ஆட்சியர் துர்கா மூர்த்தி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராகவும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன், சென்னை மாநகராட்சி இணை கமிஷனராகவும் (பணிகள்), சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (வருவாய் மற்றும் நிதி) பிரத்திவிராஜ், கரூர் மாவட்ட மாநகராட்சி கமிஷனராகவும், எல்காட் செயல் இயக்குனர் தீபனாவிஸ்வேஸ்வரி, தஞ்சாவூர் மாவட்ட மாநகராட்சி கமிஷனராகவும், கடலூர் மாவட்டம் சிதம்பரம் சப்-கலெக்டர் கிஷன்குமார், கடலூர் மாவட்ட மாநகராட்சி கமிஷனராகவும், கரூர் மாவட்டம் குளித்தலை சப்-கலெக்டர் சுவாதி திருச்சி மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை கூடுதல் கலெக்டர், திட்ட இயக்குனராகவும், காஞ்சிபுரம் சப்-கலெக்டர் ஆஷிக் அலி, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை கூடுதல் கலெக்டர், திட்ட இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் வினய்குமார் மீனா, நெல்லை மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை கூடுதல் கலெக்டர், திட்ட இயக்குனராகவும், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சப்-கலெக்டர் ஆனந்த்குமார் சிங் விழுப்புரம் மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை கூடுதல் கலெக்டர், திட்ட இயக்குனராகவும், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சப்-கலெக்டர் சிவானந்தம் சேலம் மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை கூடுதல் கலெக்டர், திட்ட இயக்குனராகவும், நீலகிரி மாவட்டம் குன்னூர் சப்-கலெக்டர் சங்கீதா உதகமண்டலம் சிறப்புப் பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனராகவும், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சப்-கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வாட்ஸ் சிவகங்கை மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை கூடுதல் ஆட்சியர், திட்ட இயக்குனராகவும், தேனி மாவட்டம் பெரியகுளம் சப்-கலெக்டர் ரஜத் பீடன், தேனி மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை கூடுதல் கலெக்டர், திட்ட இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
