கேடிசி நகர், ஜூன் 2: நெல்லை சிஎஸ்ஐ திருமண்டல தேர்தல் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தலை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.இந்நிலையில் திருமண்டல நிர்வாகத்தை கவனிப்பதற்காக சினாட் பேரவையினால் நியமிக்கப்பட்ட நிர்வாக செயலாளர் கிறிஸ்டோபர் செல்வராஜ், பொருளாளர் அனீஸ் மற்றும் 12 நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் தற்போது நிர்வாகத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நெல்லை திருமண்டல கல்லூரிகளின் மேலாளராக கிறிஸ்டோபர் செல்வராஜ், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் மேலாளராக வக்கீல் தங்கத்துரை, தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளின் மேலாளராக குருவானவர் டேனியல் தனசன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து நெல்லை திருமண்டல அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றுக்கொண்ட இவர்களுக்கு ஏஆர் லைன் சேகர தலைவர் ஜெபராஜ், ஜெபித்து ஆசீர் வழங்கினார்.
நிகழ்வில் கிறிஸ்டோபர் செல்வராஜ், அனீஸ், பாளை ஜான்ஸ் கல்லூரி தாளாளர் வக்கீல் பாலச்சந்திரன், சாராள் தக்கர் மேல்நிலைப்பள்ளி தாளாளர் புளியங்குடி அருள்சாமுவேல், கதீட்ரல் பள்ளி தாளாளர் தமிழ்ச்செல்வன், கமிட்டி உறுப்பினர்கள் டியூக் துரைராஜ், பீட்டர் ஜாண், ஏசிடி ராஜன் மற்றும் மணக்காடு ஜீவகுமார், மிலிட்டரி லைன் மைக்கேல், நொபுளி சாமுவேல், நாங்குநேரி குமார், டோனாவூர் நெல்சன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
