மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

நெல்லை, ஜூன் 2: நெல்லை அருகே அனவரதநல்லூரைச் சேர்ந்தவர் சின்னத்துரை(35). இவர். நேற்று உடையார்குளத்தில் ஒரு வீட்டுக் கான்கிரீட் கலவை இயந்திரத்தை இயக்கினார். அப்போது தண்ணீர் மோட்டாருக்காக இணைக்கப்பட்டிருந்த மின் கம்பி, கலவை இயந்திரத்தில் சிக்கியதில் சின்னத்துரை மீது மின்சாரம் பாய்ந்தது. சக தொழிலாளர்கள், அவரை மீட்டு வல்லநாடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Related Stories: