×

எல்லை மாவட்டங்களில் மக்கள் தொகை மாற்றங்களே கடுமையான சவால்: அமித் ஷா கருத்து

அகமதாபாத்: எல்லை மாவட்டங்களில் ஏற்படும் மக்கள் தொகை மாற்றங்களே நாட்டின் முன் உள்ள மிகப்பெரிய சவால் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள புஜ் நகரில் நடந்த பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்திற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார்.

அப்போது அமைச்சர் அமித் ஷா பேசுகையில்,‘‘தற்போதுள்ள ஊடுருவல்காரர்களை அடையாளம் காண்பதையும் டிரோன்கள் மற்றும் போதைப்பொருட்கள் தொடர்பான அச்சுறுத்தல்களை கண்காணிப்பதையும் உறுதி செய்வதற்காக எல்லை மாவட்ட நிர்வாகங்கள் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை வகுக்க வேண்டும். எல்லை மாவட்டங்களில் ஏற்படும் மக்கள் தொகை மாற்றங்களே நாட்டின் முன் உள்ள மிக கடுமையான சவாலாக உள்ளது.

மாவட்ட ஆட்சியர்கள் இதுபோன்ற நிகழ்வுகளை கடுமையாக கண்காணித்து தவறாமல் அறிக்கை சமர்ப்பிப்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பிற இயற்கைக்கு மாறான காரணங்களால் இந்தியா முழுவதும் ஏற்படும் மக்கள் தொகை மாற்றங்களை மதிப்பிடுவதற்கும் இந்த பிரச்னையை கையாளுவதற்கான நடவடிக்கைளை பரிந்துரைப்பதற்கும் ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்படும்”என்றார்.

Tags : Amit Shah ,Ahmedabad ,Home Minister ,Union ,Home Minister… ,
× RELATED ஜூன் 10ல் பாஜக கூட்டணி கூட்டம்: ஒன்றிய...