×

ஒடிசாவில் எஸ்ஐஆர் பணி துவக்கம்

புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை (எஸ்ஐஆர்) தேர்தல் ஆணையம் துவங்கியுள்ளது. ஜூன் 28ம் தேதி வரை இந்த பணி நடைபெறும். இது தொடர்பாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆர்.எஸ்.கோபாலன் கூறுகையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு பணிக்காக 45,255 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மாநிலத்தின் 147 சட்டமன்ற தொகுதிகளிலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

வாக்காளர்கள் ஏறக்குறைய 75சதவீதம் பேர் தேவைப்படும் படிவங்களில் கையெழுத்திட்டால் மட்டுமே போதுமானது. சிறப்பு தீவிர பணிக்காக அவர்கள் எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை. எந்தவொரு உண்மையான குடிமகனும் தீவிர திருத்தப் பணிக்காலத்தில் எந்தவித சிரமங்களையும் சந்திக்க மாட்டார்கள். சிறப்பு தீவிர திருத்தப் பணி குறித்து பரவும் ஆதாரமற்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்” என்று தெரிவித்தார்.

Tags : SIR ,Odisha ,Bhubaneswar ,Election Commission ,Chief Electoral Officer ,R.S. Gopalan ,
× RELATED ஜூன் 10ல் பாஜக கூட்டணி கூட்டம்: ஒன்றிய...