×

கோடைகால கூட்ட நெரிசலை தவிர்க்க நாகர்கோவில் -எழும்பூருக்கு நாளை சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: கோடை கால கூட்ட நெரிசலை தவிர்க்க, நாகர்கோவில் – எழும்பூர் ஒரு வழி சூப்பர்ஃபாஸ்ட் (06196) சிறப்பு ரயில் நாளை இயக்கப்படும். இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 11.45 மணிக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, அதே நாள் இரவு 23.55 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடையும் (ஒரு சேவை மட்டும்).

இந்தச் சிறப்பு ரயிலில் பயணிகளின் வசதிக்காக மொத்தம் 20 பெட்டிகள் இணைக்கப்படும். அதில் 2 ஏசி சேர் கார் பெட்டிகள், 16 சாதாரண சேர் கார் பெட்டிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட 2 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் இடம்பெற்றிருக்கும்.

இந்த சிறப்பு ரயில் நாகர்கோவிலிருந்து சென்னை செல்லும் வழியில் திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த நாகர்கோவில் -சென்னை எழும்பூர் ஒரு வழி சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கும்.

Tags : Nagercoil ,Egmore ,Southern Railway ,Chennai ,Nagercoil-Egmore ,Nagercoil railway ,
× RELATED வால்பாறை அருகே பெண் சிறுத்தை உயிரிழப்பு