- சென்னை
- கலெக்டர்
- ரஷ்மி சித்தார்த் ஜகாடே
- கல்பனா சாவ்லா
- நாசா
- சமூக நலன்புரி மற்றும் மகளிர் உரிமைகள் திணைக்களம்
சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம், நாசாவின் முதல் இந்திய பெண் விண்வெளி வீராங்கனை என்ற பெருமையை பெற்ற கல்பனா சாவ்லாவின் நினைவாக, தமிழ்நாட்டை சேர்ந்த, துணிச்சலான மற்றும் வீரசாகச செயல்புரிந்த பெண்களுக்கு “துணிவு மற்றும் வீர தீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட உள்ளது.
இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படும் விருதாளருக்கு விருதுக்கான பதக்கத்துடன் ரூ.5 லட்சத்திற்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவை 2026ம் ஆண்டு சுதந்திர விழாவின் போது தமிழ்நாடு முதல்வரால் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழக அரசின் விருதுகளுக்கான www.awards.tn.gov.in இணையதள பக்கத்தில் வரும் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 19ம் தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
இந்த இணையதளத்தில் விருதுக்கு விண்ணப்பித்த நகலுடன் சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு மேற்படி விருதுக்கான விண்ணப்ப படிவத்தினை பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்துடன் துணிச்சலான மற்றும் வீரசாகச செயல்புரிந்தமை குறித்த புகைப்படங்கள் மற்றும் பத்திரிகை செய்தி குறிப்புகளுடன் கூடிய ஆவணங்களை, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தனித்தனியாக 3 செட் தயார் செய்து 22ம் தேதி மாலை 5 மணிக்குள் ”சென்னை மாவட்ட சமூக நல அலுவலகம், சிங்கார வேலர் மாளிகை, 8வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சென்னை என்ற முகவரியில் நேரில் சமர்ப்பிக்க வேணடும்.
